மல்லை தவம், எது அசல் எது நகல்

மல்லை பகிரத ப்ரயதினத்தை வடிப்பதற்கு முன் அருகில் இருக்கும் மலையில் பல்லவ சிற்பிகள்  ஒரு முறை கதையை சோதித்து பார்த்து உள்ளனர்.
779787
இதோ படங்கள். ( புதிய கலங்கரைவிளக்கம் அதன் இருப்பிடத்தை காட்டுகிறது.)

இங்கும் பிளந்த பாறையை தேர்ந்து எடுத்து உள்ளனர் – ஆனால் இங்கு பாறை இரண்டாகவே பிளந்து இருக்கிறது.
785791
வரம் கேட்பவனும் வரம் அளிப்பவரும் இடம் மாறி உள்ளனர். ( இடமிருந்து வலம் ). சோதனை என்பதால் சற்று சிறிய அளவில் செதுக்கி உள்ளனர் (in low relief)
774795
கம்பீர யானைகள் இல்லை ( ஒன்று இரண்டு யானை தலை தெரிகிறது ), பறக்கும் கந்தர்வர்கள், சிவ பூதகணங்கள் உள்ளனர்.

771782789793
சிவனின் கையில் அஸ்தரம் இல்லை.
777806
வரம் அளிக்கும் செதுக்கல் இங்கே இறங்கும் கங்கையின் இடத்தை விட கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் – விண்ணவரும் மன்னவரும், அனைத்து ஜீவராசிகளும் கங்கை இறங்கும் காட்சியை காணவே விரைகின்றனர்….. எனவே இங்கு அவர்கள் முதலில் விண்ணகர கங்கை புவி இறங்கும் காட்சியை மாட்டும் செதுக்க எத்தனித்து ..பின்னர் மறுமுறை அசலில் செதுக்கும் பொது இதில் அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெரும் காட்சியை பிணைத்து செதுக்கி உள்ளனர்….

மல்லை தவம் ..முதல் பார்வை

எங்களை பற்றி என்ற மடலில் நாங்கள் இட்ட படத்தை பற்றி விமர்சனங்கள் பல வந்துள்ளன…இங்கே இதை விட சிற்ப கலையை போற்றும் படம் இட்டு இருக்கலாம் என்று, எனினும் அந்த படம் இட்டதின் நோக்கம் அறிய பொக்கிஷங்களை அவற்றின் மதிப்பை அறியாமல் உள்ளோம் என்பதை உணர்த்தவே.

பின்னால் இருக்கும் மல்லை தவம் ….சரி அதற்கு ஈடு கட்ட ஒரு முழு தொடரையும் அற்பனிக்கிறோம்

இதோ மல்லை தவம் – ஒரு முதல் பார்வை.

பல்லவ சிற்பிகளின் சிந்தனை சிறகடித்து பறக்க, அவர்கள் கண்ட இந்த மலை அவர்களின் கைவண்ணத்தின் கீழ், நூறு அடி நீளம் நாற்பது அடி உயரமும் உள்ள கற்பாறை கலை பாறையாக மாறி , தமிழக சிற்பக்கலையின் விஸ்வரூபமாக உருபெற்று அதன் மனிமகுடாமாக திகழ்வதை பாருங்கள். இதை போல, இந்த அளவில், அதுவரை எவரும் சிந்தித்ததில்லை, அதன் பின்னரும் எத்தநித்ததில்லை. ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கழிந்தும் நம்மை அசரவைக்கும் படைப்பு

முனிவரின் சாபத்தினால் சாம்பலான தனது முன்னோர்கள் உயிர் பிக்க கடுந்தவம் புரிந்து, விண்ணகர கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகிரதனின் உன்னத முயற்சி. இதை சித்தரிக்க இயற்கையாகவே பிளந்த பாறையை தேர்தெடுத்த சிற்பி, அதில் விண்ணவர், நாகர், பூலோகவாசிகள் , மிருகங்கள் என்று ஒரு உலகத்தையே செதுக்கி (அனைத்தையும் விளக்க இதை ஒரு தொடராக இட வேண்டும் ) …அதில் பல புதிர்களை வைத்து …முதல் புதிர் அர்ஜுனன் ஈசனின் பசுபத அஸ்திரத்தை தவம் செய்து பெரும் காட்சியை பிணைத்து ( இதை விளக்க அடுத்து வரும் சோதனை தவம் மடல் படியுங்கள் ) அதில் பூனை, எலி , யானை, வேடன் , சிவா பூதகனத்தின் வயிற்றில் புலி முகம் என்று பல சுவாரசியமான சிற்பங்களையும் உலவ விட்ட கற்பனை அருமை.

முதல் காணல் என்பதால் – நிறைய விளக்கம் இல்லை – நீங்கள் பார்க்கும் பிளவு முன்காலங்களில் மழை பெய்யும் பொது அருவி போல மழை நீர் கங்கை இறங்கும் கோலத்தை நடித்து காட்டும் வண்ணம் செதுக்க பட்டுள்ளது. கங்கையின் வலது புறம் ஒரு காடு .. இடது புறம் விண்ணவர்கள் இந்த அறிய காட்சியை காண விரைகின்றனர். வரம் அளிக்கும் ஈசனின் அதிகார தோரணை, மற்றும் வரம் பெறுபவரின் கடுந்தவத்தினால் எலும்பும் தோலுமாய் காட்சி ( அணு ஆயுதம் பெற தவம் …இப்போது இந்தியாவின் நிலை ??)

தொடரும்

வராஹ அவதாரம், மல்லை மற்றும் உதயகிரி, மால் செய்யும் மாள்

மல்லை வராக அவதாரம் சிற்பம் பலரும் பார்த்த ஒன்று. ஆனால் அதிலும் ஒரு பல்லவ டச் உண்டு.. படங்களை உற்று பாருங்கள்…
 

 

பூமா தேவியின் மேலாடை சண்டை நடந்த அமளியில் சற்றே நழுவி அவளது மடியில் விழுகிறது…தேவி வெட்கத்தில் தலை சற்றே குனிந்து ( இதற்கு நீங்கள் இரண்டாம் படத்தை பார்க்கவேண்டும் – ஒரு பக்கமாக இருந்து எடுத்த படம் …நேர் பார்வையில் தெரியாது )மாலும் அன்புடன் தேவியை அணைக்கும் வண்ணம் சிற்பி செதுக்கி உள்ளான். 

 

இதே வடிவத்தின் இன்னொரு கோலம் உதயகிரி குடவரையில் கண்டேன். அங்கோ வராகம் மிக பெரிதாக, ஆக்ரோஷமாக உள்ளார்,தேவி அவரது கோரை பற்களில் இருந்து தொங்குவது போல உள்ளதே… இது அந்த சிற்பியின் பார்வை என்று நினைத்தேன்… அனால் திருவாய்மொழி பாடலை படித்த பின் தான் இருவருமே சரியான வடிவத்தை தான் சித்தரித்து உள்ளனர் என்று புரிந்தது…

 

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்கிழ்புக்கு
இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் பாரேன்னும்
மடந்தையை. மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே.

 உதயகிரி சிற்பி எடுத்த வரி இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும் மல்லை சிற்பி எடுத்த வரி இது தடம் பெருந்தோள் ஆரத்தழுவும், ஒரே கதையின் இரு அங்கங்கள் இவை… முதல் பாகம் உதயகிரி இரண்டாம் பாகம் மல்லை..

 

 

மல்லையில் ரதங்களின் நடுவே யானை என்ன செய்கிறது ?

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள். சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம். தமிழகத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் – பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன. மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.

 

இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. ?

சரி படங்களை பாருங்கள்…

542

 

முதலில் தொலைவில் இருந்து.. சரி தனித்தனியே பார்போம்…..

 


இந்த பக்கம்…

சரி அந்த பக்கம்……

 

 

 

கொஞ்சம் அருகில் சென்று

இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரதத்தினை பாருங்கள்.


சகாதேவ ரதம் கஜ ப்ரிஷ்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கஜ – யானை , ப்ரிஷ்டம் – முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரதத்தின் மேல் பாகமும் யானையின் முதுகும் ஒத்து இருப்பதை உணரலாம். இதனை காண்போருக்கு உணர்த்தவே யானை சிற்பம் அங்கு உள்ளது … இங்கே இருக்கும் இன்னும் இரண்டு பிராணிகளின் சிற்பம்…ஒன்று சிங்கம் மற்றொன்று காளை…இவற்றை பின்னர் பார்போம்…

கலை புலிகள், மல்லை புலி குகை

சென்னை வாசிகள் பலருக்கு தெரியாத மூன்று கலை பெட்டகங்கள் மல்லைக்கு சற்றே முன்னர் சாளுவன்குப்பம் என்னும் இடத்தில் இருக்கிறது…மல்லை நுழைவதற்கு சுமார் இருநூறு அடி முன்னர் ASI போர்டு இருக்கிறது…ஆம் இங்கு இன்றும் புது புது கண்டு பிடிப்புகள் உண்டு…

 வெளி தோற்றத்தில் மிக எளிமையாக காட்சி அளிக்கும் இந்த இடம் …மூன்று அருமையான பல்லவ கலை பொக்கிஷங்களை கொண்டு உள்ளது.. ஒன்றொன்றாக பார்ப்போம்.

 

முதலில் புலி குகை என்று தவறாக அழைக்கப்படும் இந்த யாழி மண்டபம்…பதினோரு யாழிகள் சுற்றி இருக்க …..மேடை …இருபுறம் பாயும் சிங்கங்கள்…ராஜ சிம்ம பல்லவனின் சின்னம்…1300 வருடம் பழமை …நீங்கள் தொட்டு பார்க்கலாம்.

யாழி என்றோமே…எதனால்…உற்று பாருங்கள்…இவை பார்ப்பதற்கு சிங்கங்கள் போல இருந்தாலும் அழகிய வளைந்த கொம்புகளை உடையன..எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு எப்படி உணர்த்துவது…சரி…இதோ படத்துக்குள் நானே வருகிறேன்…குண்டாக ஆம் நூறு கிலோ எடையுடன் என்னை சிறியதாக காட்டும் சிற்பத்தின் அளவு இப்போது புரிந்ததா.


ஒரு புறமாக இருக்கும் மேடைக்கு அடுத்து இரு யானைகள்…அவற்றின் மேல் அம்பாரி…அதனுள்…ஆம் ஏறி படம் எடுத்தோம்…சரியாக தெரியவில்லை…மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன சிற்பங்கள்….


அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக இந்த அழகிய யாழி மண்டபத்தை கண்டு வாருங்கள்…இன்னும் இரண்டு இடங்கள் பாக்கி …..