பிருங்கி முனிவர் வரலாறு

புலி கால் முனிவர் பற்றி கூறும் பொது இந்த மூன்று கால் முனிவரும் நினைவிற்கு வந்தார்.

பிருங்கி முனிவர் – மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். ( அதனால் சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார், சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட)

ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் சென்ற முனிவர், தம்பதி சமேதராய் இருந்த சிவனையும் பார்வதியையும் கண்டு திகைத்தார். சிவனை மட்டுமே அன்றுவரை வணங்கி வந்த முனிவர் ,சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என எண்ணித் தம்மை ஒரு வண்டாக உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் திரும்பும் அவரை கண்டு கடுஞ்சினம் கொண்டாள் சக்தி. தன்னை வணங்காத முனிவருக்கு தன் சக்தி மட்டும் எதற்கு என்று எண்ணி தன் சக்தியை எடுத்துக்கொண்டால்.

தமது சக்தியைத் இழந்த முனிவர், வெறும் எலும்புக் கூடாய் மாறி நிலையாக நிற்க கூட முடியாமல் குடை சாய்ந்தார் – அவ்வாறு கீழே விழப் போன அவரை, சிவன் தனதுகோலைக் கைப்பிடியாய்த் தந்து காப்பாற்றினார்.

( இது மீண்டும் நடை பெறக்கூடாது என்று தானோ என்னமோ அப்பனின் ஒரு பாதியை வாங்கிக்கொண்டாளோ – சிலர் இந்த கதை வேறு விதமாக சொல்வார்கள் – முனிவர் வருவதை கண்டு அவரது நோக்கத்தை அறிந்த சக்தி ஈசனிடம் மிக அருகில் அமர – முனிவர் அப்போதும் அப்பனை மட்டும் சுத்தி வந்தார் – உடனே உமை ஈசனின் ஒரு பாதியை எடுத்து அம்மை அப்பன் என்று அர்த்த நாரியாய் மாற – அவர் வண்டாக மாறி ஈசன் இருக்கும் பக்கம் மட்டும் குடைந்து சுற்றி வந்ததாக கூறுவர் )

அதன் பிறகு ….அது வேறு கதை . இப்போது சிற்பத்தை பார்போம். இவரது சிற்பத்தை எங்கெல்லாமோ தேடினின் – கடைசியில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் வெளி மண்டப தூணில் நமக்காகவே மூன்று கால்களுடன் காட்சி தந்தார் – மிக அரிய சிலை. எலும்பு உருவம் அவ்வளவு சரியாக சித்தரிக்க படவில்லை –



எலும்பு உருவத்தையும் மூன்று கால்களையும் பார்க்க மற்ற இடங்களில் உள்ள படங்களை இணைக்கிறேன்.
2808281028122814
படங்களுக்கு நன்றி – அர்ச்சனா ரகுராம்
Temple Dairies – Part 1
மற்றும்
*http://www.kamat.com/kalranga/mythology/7667.htm*
South Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar

சிவாஜி படத்தின் பாட்டில் பல்லவ சிற்பத்தின் சாயல் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம் வெளி வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்று விட்டது

http://www.youtube.com/watch?v=xjVm1sYuESc

எனினும் அந்த படத்தின் துவக்க பாட்டில் ஒரு விஷயத்தை நான் பார்த்தேன். ( மீண்டும் நான் எங்கும் செல்லவில்லை – இன்னும் சிற்பத்தில் தான் உள்ளேன் ) இதை அப்படியே விட்டு சிற்பத்திற்கு செல்வோம்.

சரி நாம் மல்லை சென்று பல வாரங்கள் ஆகிவிட்டன. இதோ இன்று சென்றுவிடுவோம், ஒரு மிக விநூதமான சிற்பம். அனைவரின் கண் முன்னரே இருந்தும் பலரும் கவனிக்காமல் செல்லும் சிற்பம். ஆம், உலகிலேயே மிக பெரிய மல்லை தவம் சிற்பம். ( சரி, வாடிக்கையாளர்கள் பலரும் நாம் தான் ஏற்கனவே பலமுறை அந்த தவத்தை பார்த்துவிட்டோமே – என்று சொல்வது கேட்கிறது ) எனினும் – இந்த இடுகையை படித்து பார்த்து முடித்த பின் இத்தனை முறை அங்கு சென்றும் இதை நாம் எப்படி விட்டோம் என்று சொல்வீர்கள், பின்னர் முதலில் சிவாஜி படத்தை இதனுள் கொண்டு வந்ததற்கும் விடை கிடைக்கும். .

சரி, படங்களை பாருங்கள் – தொலைவில் இருந்து மெல்ல நகிர்ந்து நாம் அருகே செல்கிறோம். முக்கிய நபர்கள் – இருவர். இல்லை , அவர்களுக்கு நடுவில் இருக்கும் ….யார் அது






குட்டி பூத கணம் – அதன் வயிற்றில் சிங்க முகம். அற்புத வேலை பாடு.இப்போது பாட்டை இங்கே கொண்டு வந்ததன் அர்த்தம் புரிந்ததா.

27942797

இதை சிற்பி என் செதுக்கினான். பல்லவ சிற்பியின் விளையாட்டு தனமா இது ? இல்லை வேறெங்கும் இது போல சிங்க தொப்பை கொண்ட பூத கணம் உண்டா? ஆம் உண்டு, நம் அமெரிக்க தோழி காதி அவர்கள் உதவியால் – ஆனால் அது அடுத்த இடுகையில்.

மீண்டும் ஒரு முறை வினோத தொப்பையை ரசியுங்கள்.
2780278527822788

இத்தனை முறை மல்லை சென்றும் இதை எப்படி பார்க்கவில்லை என்று தினருங்கள், அடுத்த முறை எங்கு சென்றாலும் உர்த்வ முகம் என்று அழைக்கப்படும் இந்த வினோத பூத கனத்தை தேடுங்கள்.

புலிக்காலர், ஒரு அருமையான சிற்பம் – மதவிளாகம்

கடந்த மூன்று ஆண்டுகளாக் நான் பல சிறந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினை இணையம் வழிவகுத்தது . அவர்களுள் அன்பர்கள் பலரும் தந்த ஊக்குவிப்பாலும், உதவிகளாலும் மட்டுமே என்னால் இந்த தளத்தை நிறுவலாம் என்ற எண்ணம் எழுந்தது.

அவர்களுள் நான் சந்தித்த ஆர்வலர் – திரு சந்திரா அவர்கள். எப்போதும் காலில் சக்கரம் இயற்கையாகவே இருப்பது போல சுறுசுறுப்பாகச் சுற்றி தென்னகம் முழுவதும் உள்ள சிதைந்த கோவில்களை பட்டியல் இட்டு அவற்றை எவ்வாறு செவ்வனே சீரமைக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்- அதனுடன் மட்டும் நில்லாமல் – அந்த பணிகளில் தன்னை ஆழ்த்திக்கொண்டிருக்கும் இவர், இன்று நமக்கு ஒரு அற்புத சிற்பத்தைத் தந்துள்ளார்.

முன்பு நாம் தஞ்சை பெரிய கோவில் தூணில் இருக்கும் புலிக்கால் முனிவர் சிற்பம் மற்றும் அவரது கதையை பார்த்தோம். இன்று மீண்டும் அவர் தான் – எனினும் இந்த சிற்பத்தை பாருங்கள் – வயலூரை அடுத்த ஒரு சிறிய ஊரில் உள்ள மதவிளாகம் கோவில் சிற்பம்.

சிற்பியின் அற்புத சிந்தனை வியக்கவைக்கிறது- புலிக்காலை வைத்துக்கொண்டு யோக நித்திரையில் இருக்கும் ஒரு முனிவரை அற்புதமாக சித்தரித்துள்ளான் சிற்பி – முனிவர் என்பதால் ஜடா முடி, கொண்டை, ருத்ராக்ஷம் , கைகளின் யோக முத்திரைகள் – ஆனால், சிற்பத்தின் சிறப்பு – வெறும் புலி காலை மட்டும் காட்டாமல் அமர்ந்திருக்கும் ஒரு புலியின் பாவனையை கல்லில் செதுக்கிஇருக்கும் அவன் திறமை – அருமை.
27502754
மதவிளாகம் கோவில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மேல் சுவர் சரியாக செப்பனிடாததால் மழை நீர் உள்ளே வருகிறது. கொடிமரத்தின் தகடுகள் அனைத்தும் இழந்து மொட்டையாக அதி மரம் மட்டும் தான் உள்ளது.

ஒரு அற்புத சிற்பத்தை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி சந்திரா !!

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் -பேலூர் யானை – திரு பிரசாத் அவர்களது ஓவியம்

இன்று நமது நண்பர் பிரசாத் மீண்டும் ஒரு அற்புத ஓவியத்தை தந்துள்ளார் . பேலூர் யானை , அதன் அருமையான சிற்பத்தை அப்படியே ஒரு புகை படத்தை வைத்துக்க் கொண்டு மட்டும் ஓவியத்தை தீட்டி இருக்கும் திறமை அபாரம் – பிரசாத் ( அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார் ). அவரது மற்ற படைப்புகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பிரசாதின் ஓவியங்கள்

அருமையான ஓவியம் – அவர் பார்த்து வரைந்த புகைப்படத்தையும் பாருங்கள். அருமை
27422745

இன்னொரு புகைப்படம் இந்த இடுகையின் காரணம். எனக்கு பத்திரிகைகளில் சிறு வயதில் பிடித்து ஆறு வித்தியாசங்கள் ( அதை மட்டுமே வாசிக்க தெரியும் அப்போது / இப்போது !!)

இந்த சிற்பத்தை பார்த்தவுடன் பிரசாத் தீட்டி உள்ள ஓவியமும் இதுவும் ஒரே சிற்பங்களா என்ற ஐயம் வந்தது. பிறகு அவர் தனது படத்தை அனுப்பி வைத்தார். ஐயம் தீர்ந்தது.

சரி நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து சொல்லுங்கள் – இரண்டும் ஒரே சிற்பமா ? இல்லையேல் ஆறு வித்யாசங்கள் உள்ளனவா ?

274227452739

அருமையான யானை சிற்பம், சிற்பி உங்கள் படைப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் பிரசாத். தொடருங்கள் உங்கள் அருமையான பணியை.

இன்றைய கதாநாயகன் காட்டும் உடல் கட்டு – பல்லவ கால சிற்பம்

பல காலமாக தமிழ் படங்களில் தொப்பையை இறுக கட்டி, அதன் மேல் சட்டை அதற்க்கு மேல் கோட் அணிந்து , சொட்டை தலையை மறைக்க விக் அணிந்து, முகத்திற்கு வெள்ளை அடித்து …அப்ப்பா, பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வயதில் தனது பெண் வயது நடிகைகளுடன் மரங்களை சுற்றியும் வயிற்றில் பம்பரம் விட்டும் நம்மை அருவருப்பில் ஆழ்த்தி வந்த கோடம்பாக்கம் , மும்பை மற்றும் அமெரிக்க படங்களை பார்த்து கடைசியில் கொஞ்சம் திருந்தி தங்கள் இடையை கட்டுப்பாட்டில் ( சில நடிகைகளும் கூட ) கொண்டு வந்துள்ளனர். மிக நல்ல விஷயம் .

ஆனால் இவர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மல்லை மகிஷா சுரமர்தினி மண்டபத்தில் ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர் வடித்த சிற்பத்தில் வரும் ஒரு வீரப்பெண் காட்டும் உதாரணம் ஏனோ முன்னரே எடுபடவில்லை.

புரியவில்லையா,படங்களை பாருங்கள். பல கோணங்களில் இடுகிறேன். தேவியை பார்காதீர்கள்.
2729270527082714271627312720
சரி சற்று அருகில் செல்வோம். இப்போது தெரிகிறதே. இடுகையின் அர்த்தம் புரிகிறதா ??

அப்பப்பா – என்ன ஒரு கட்டுடல், கையில் பெரிய கத்தி, மகிஷன் காலை வெட்டும் அந்த அற்புத சுந்தரியின் கட்டுடல் கண்ணை பறிக்கிறது. கச்சை கட்டி அவளது முறுக்கேறிய உடலை அழகே வடித்த சிற்பி வாழ்க.

இன்னும் உடற் பயிற்சி செய்யாமல் கணினி முன்னரும் தொலைக்காட்சி பெட்டி முன்னரும் அமைந்திருக்கும் என்னை போல் குண்டர்கள் முதலில் எழுந்து ஓடுங்கள். இடையை குறையுங்கள். சுவரை வைத்து தானே சித்திரம் ( சிற்பம்) எழுத ( செதுக்க ) முடியும்