கல்லை குடைய வேண்டுமே ?

இதுவரை பல குடைவரைகளை நாம் பார்த்தோம். இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க, அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் அல்லாமல் தொழில் நுட்பத்தையும் அறிய வேண்டும். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் செல்லும் உழைப்பு, கலை திறன் சேர்த்து வரும் கலவை – அவற்றை அறிந்தால் தானே அவற்றின் அருமை முழுவதுமாக வெளிப்படும்.

இதை அறிய மல்லைக்கு மீண்டும் பயணிப்போம். இங்கே இருக்கும் அற்புத குடவரைகளை வெறும் பாறைகளில் கற்பனை செய்தது மட்டும் அல்லாமல் கருங்கல்லில் எவ்வாறு செதுக்கினான் நம் சிற்பி . அப்போது அவர்களிடம் இருந்த கருவிகள் என்ன. நமக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே அங்கே சில தடயங்களை விட்டு சென்றுள்ளனர் பல்லவ சிற்பிகள்.

மல்லையில் இங்கும் அங்கும் வேலை பாதியிலேயே நின்றுள்ளது ( இது எதனால் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் – மல்லையை நிறுவிய மன்னன் யார் என்ற கேள்விக்கும் விடை வெளி வரலாம் – வேலை நடுவில் நிற்க்க காரணம் என்ன, எதிரி நாட்டு படை எடுப்பா ?) – இதில் நமக்கு ஒரு நல்லது – பாதியில் வேலை நின்றதனால் ஆங்காங்கே நமக்கு பல தடயங்கள் தெரிகின்றன.

கல்லில் உளி கொண்டு நேர் கொடு போல சிறு துவாரங்களை செதுக்கி, அதனுள் மர கட்டை கொண்டு அழுத்தி ( ஆப்பு ) – அதில் நீர் விட்டனர். கட்டை நீரை உரிந்து உடல் பெருக்கும் – அனைத்து ஆப்புகளும் ஒரே சீராய் பெருக்க, பாறை விரிய முயலும், பிறகு பிளக்கும்.
14671483
148114611463
சரி, பாறையை பிளக்க இது உதவும். பாறையினுள் குடைந்து குடவரை எப்படி – அதற்கும் சான்றுகள் / தடயங்கள் உள்ளன.
1465147314751477
149114931495
பாறை முகத்தில் சதுரம் சதுரமாக பிரித்து, அதை இன்னும் சிறு சதுரங்களாக செதுக்கி – முடிவில் சிறு கற்கள் போல பாறை சிதறும். அப்பா, என்ன கடினமான வேலை – கை ஓடியும், வியர்வை , உதிரம் இரண்டும் சொட்ட செய்த கலை.
1458148514711479

இப்போது அதன் வெளிப்பாடு – கடின உழைப்பு, கல்லில் செய்ததனால் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கண்முன்னே நின்று பண்டைய கலை திறன் மற்றும் தொழில் நுட்பத்தின் அழியா சின்னங்களாய் திகழ்கின்றன.
1487

நான் பெரியவன் – என்னைவிட பெரியது – தஞ்சை பெரிய கோவில் இரண்டாம் பாகம்

சரி, முந்தைய மடலில் பெரிய கோவில் ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்தோம். பொன்னியின் செல்வரான அருள்மொழி வர்மரின் தாக்கத்தில் சற்று நிறைய எழுதி விட்டேன்.
1409
தொலைவில் இருந்து பார்த்தோம். இப்போது நெருங்கி செல்வோம், ஆனால் ஒரு மாற்றம். உங்கள் கண்களை கட்டி, அழைத்து போகிறோம். முதல் வாயில் – இது சோழர் காலத்தில் கட்ட பட்டது அல்ல – அடுத்து காந்தளூர் சாலையில் ராஜ ராஜன் பெற்ற வெற்றியை குறிக்கும் கோபுரம் – கேரளாந்தகன் வாயில் – அதையும் இப்போதைக்கு தாண்டி செல்வோம். அடுத்து அரசனாக பதவி ஏற்கும் பொது அவன் சூடிக்கொண்ட பெயரால் விளங்கும் வாயில் – ராஜ ராஜன் வாயில் – இங்கே உங்கள் கண் கட்டை சற்று அவிழ்த்து விடுகிறோம்.

1330

இது என்ன – வாயில் காப்போன் – ( த்வார பாலகன் ) – கோரைப் பல்,பிதுங்கும் கண்களுடன் உங்களை எதிர் கொல்லும்.
13491352
13611363
13651359
1430

நான்கு கரங்கள்,காலை உயர்த்தி,அது என்ன காலின் அடியில்,ஒரு சிங்கம்,சரி இது என்ன ஒரு பாம்பு,சரி பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக
யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதை முழுங்கும்
பாம்பு (anai kolran…anaconda ??),அது எவ்வளவு பெரியது,இப்போது
வருகிறது பாடல்.எப்படி கொர்கிறான் பாருங்கள் சிற்பி.
1498
1399140113741443

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1068&padhi=068&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.68.2

புரிகொள்சடையர் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க இருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பெரிய களிற்று யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை
மலையில் விடம் உண்ட கரிய கண்ட ராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும்
இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர்.
கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு
பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.

1365
இப்போது மேலிருக்கும் துவரபாலகன் கைகளை கவனியுங்கள்,கீழே பார்,யானையை முழுங்கும் பாம்பு,அதை விட நான் எவ்வளவு பெரியவன், ஜாக்கிரதை,உள்ளே இருப்பவரோ,விஸ்மயம் ( சொல்ல நாவில்லை என்று அந்த கற் சிலை தனது கையால் விளக்கும் அழகு )

பெரிய கோவில் துவாரபாலகர்கள் ( வாயிற்காப்போன்) அல்லவா, இதை எப்படி உங்களுக்கு உணர்த்துவது – சரி படத்தில் ஒரு ஆளை, இல்லை ஒரு யானையை கொண்டு வருவோம் – இப்போது புரிகிறதா – பதினெட்டு அடி உயரம் உள்ள இவர்கள்.
13701372
1357
13851391
1388
ராஜ ராஜன் நிறுவிய தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜெஷ்வரம், பெருவுடையார்
கோவில் என்று அவனே அழைத்த, பிருகதீஸ்வரர் ஆலயம்.

அவன் இதனை தக்ஷின மேரு என்று கண்டான், தக்ஷின கைலாசம்,இதனாலேயே
இங்கு விமானம் கோபுரத்தை விட உயரமாக உள்ளது ( மற்ற ஆலயங்களில்
கோபுரம் விமானத்தை விட உயரமாக இருக்கும் )

விமானத்தை கைலாயம் என்று உணர்த்துகிறான் பார்த்தீர்களா….( திரு
K. பாலு ஐயா அவர்கள் இதனை எனக்கு மிக அழகாக விளக்கினார்)

எப்படி ஒரு சிறு சிலை வடிவம் – ஒரு பெரும் தத்துவத்தை விளக்குகிறது பாருங்கள்..

சரி இப்போது மற்ற படங்களை பாருங்கள்

முதல் கோபுரம்
134114141417
இரேண்டம் கோபுரம் – கேரளாந்தகன் வாயில்
13761379
மூன்றாம் கோபுரம் – ராஜ ராஜன் வாயில்
14341436
முடிவில் மகா மேரு விமானம் – விமானத்தை பற்றி பல தகவல் உண்டு – அவற்றை விளக்க நாம் மீண்டும் அங்கே செல்வோம். அதுவரை படங்களை பாருங்கள் – அவ்வப்போது படங்களுள் வரும் மனிதர்களை வைத்து இந்த கோவிலின் பெயர் ஏன் பெரிய கோவில் என்று வந்தது என்பது உங்களுக்கு புரியும்.
1332150013361339134613441367139714031412142014231425142814381445

(படங்கள் தந்து உதவிய நண்பர்கள் மற்றும் திரு ரோகன் ராவ் அவர்களுக்கு நன்றி
http://rohanrrao.wordpress.com/ )

இதோ தஞ்சை பெரிய கோவில் – முதற் பாகம்

அஜந்தா மற்றும் எல்லோரா முதற் பார்வை பார்த்தோம் – அப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கும் அதே போல ஒரு முதற் பார்வை இட வேண்டும் என்று நண்பர் பலரும்
கேட்டுக்கொண்டதின் பெயரில் இதோ தஞ்சை பெரிய கோவில் – இதற்கு முன்னரே ஒரு சிறு சிற்பம் வெளி வந்து விட்டது எனினும் இது இந்த தொடரின் முதற் பாகம்

சோழ பேரரசன் முதலாம் ராஜ ராஜன், ஒரு அற்புத மனிதன். அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட இவன், பட்டத்து இளவரசனான தனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் படுகொலையுற்ற பின் (969 AD) , தனது சிற்றப்பன் அரியணை மீது ஆசை கொண்டதனால் அவனுக்கே விட்டுக்கொடுத்து ( 985 AD) பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து பிறகு அரியணை ஏறி சோழ சாம்ராஞ்சியத்தை அதன் உச்சிக்கு இட்டு சென்று அதற்கு முடிசூடுவதுபோல ஒரு கோவிலை பிரமாண்டமாக கட்டி அதற்க்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூடினான்.

இதை திருவாலங்காடு தகடுகள் மூலம் நாம் அறியலாம் …. திரு கே ஏ நீலகண்டசாஸ்திரி சோழர்கள் புத்தகத்தில் … பக்கம் (pages 212 -213)

Verse 69 of the plates

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால்
ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட
காரிருளைப் போக்க , அருண்மொழி வர்மன் அரசனாகுமாறு
அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் ஷத்ரிய தருமத்தை
நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை மனதார விரும்பவில்லை
என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை
விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீரு மட்டும்
அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரச பதவியை
மறுத்துவிட்டான் …..

என்று தெரிவிக்கின்றன

மேலும் verse 70 of the plates

அருண்மொழியின் உடலில் உள்ள சில அடையாளங்களை பார்த்தபோது,
மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூவுலகுக்கு
வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை
ஆளும் பொறுப்பை தானே மேற்கொண்டான்.

( அமரர் கல்கி இதனை எடுத்து அதில் தனது அமர காவியமான பொன்னியின் செல்வனை நமக்கு படைத்தார் )

இன்னொரு தகடு – ஈசலம் – திரு நாகசுவாமி அவர்களின் தளத்தில் மேலும் படியுங்கள்

http://tamilartsacademy.com/articles/article29.xml

அருள்மொழி – நீண்ட அழகிய கரங்களை உடையவன், உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகை கொண்டவன் – கங்கா , வங்கா , கலிங்கம் , மகதா , மாலவா , சிங்கள , ஆந்திர , ரட்ட (ராஷ்ட்ரகூட அல்லது மஹாராஷ்ட்ரா ) ஓட்ட (ஒரிசா ), கதஹா , கேரள , குத மற்றும் பாண்டிய …தேசங்களை வென்று – அதனால் குவிந்த செல்வதை கொண்டு தஞ்சை நகரியில் பெரும் கற்றளி அத்யுத்தமம் என்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை நிறுவினான்.
1324
தஞ்சை நுழையும் போதே விண்ணை தொடும் விமானம் கண்ணில் படும் ( கர்ப்பக்கிருகம் மேல் இருப்பது விமானம் – வெளி வாயில் கோபுரம் – பொதுவாக கோபுரம் விமானத்தை விட உயரம் இருக்கும் – எனினும் இங்கும் ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரதிலும் விமானம் பெரியது – ஏன் ?)….சரி சற்று அருகில் செல்வோம் – அடுத்த மடலில்

அது என்ன எல்லோரா கைலாசநாத கோவில் – மூன்றாம் பாகம்

சென்ற மடலில் யானைகள் மற்றும் மற்ற பிராணிகள் அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ? என்று வினவினோம் அல்லவா. அதற்கு விடை..

1239
1241
1223
முதலில் அந்த படங்களை இன்னொரு முறை பார்போம்.
1207
1251
120012751203
அங்கிருந்து சற்று மேல்நோக்கி பார்வையை செலுத்துவோம் …
1213
1257
1273

இப்போது புரிகிறதா ? அந்த குடவரை அனைத்தையும் தங்கள் முதுகில் சுமப்பது போல செதுக்கி உள்ளனர்.

சரி அந்த குடவரை எவ்வளவு பெரியது, அதன் முழு வேலைபாடு என்ன – இதை வி்ளக்க எனக்கு நா வரவில்லை – என்ன வார்த்தை இட்டாலும் இதற்கு இணை செய்யா இயலவில்லை – படங்களையே பேச விடுகிறேன்
12091211121512171219122112251227
சற்று நிதானத்துடன் பார்த்து பரவசம் அடையுங்கள்…ஆயிரம் ஆண்டு, அப்போது இருந்த தொழில் நுட்பம் – ஒரு மலையின் பாகத்தை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை – மேல் இருந்து கீழ் செதுக்க வேண்டும். அனைத்தும் ஒரே மலை – ஒரே கல்.
1229123112331235123712451247124912531255
12591261126912711277127912811283128512871289
12911293129512971299130113031305
கடை சிற்பத்தில் ஒரு காவியத்தின் கதை செதுக்க பட்டுள்ளது – அதை பின்பு பார்போம்.

அது என்ன எல்லோரா கைலாசநாத கோவில்?- இரண்டாம் பாகம்

முன்பு நாம் எல்லோரா கோவில் ஒரு தொலைவு பார்வை பார்த்தோம். அப்போது ஒரு மலையை எவ்வாறு அருமையாக குடைந்தார்கள் என்பதை கண்டோம். இப்போது சற்று அருகில் சென்று அந்த உன்னத வேலைபாடின் அருமையை முழுவதுமாய் உணர பயணிப்போம். அதற்க்கு முன் சற்று உங்கள் பணிகளை சிறிது நேரம் விட்டு விடுங்கள் – முடிந்தால் உங்கள் இருக்கையில் சரியாக அமருங்கள் ( நீங்கள் பார்க்க போகும் படங்கள் உங்களை அப்படியே மயங்கி சொக்கி விழ செய்யாலம் )
1239
நீங்கள் இங்கே பார்க்கும் அழகிய யானை – அதன் மண்டையின் பிளவுகள் மற்றும் துதிக்கை, அதன் வளைவு – அது என்ன இயற்கையாய் சில கொடிகளை சுயற்றி பிடித்திருக்கும் கோலம் ..அதன் காதுகள் , சற்றே வளைந்து மடிந்த காது மடல்.
1241
சற்று, பின்னால் செல்வோமா – ஆஹா, இன்னும் ஒரு யானை, ஆனால் இயற்கையின் சீற்றத்தால் உடைந்து உள்ளது…
1223
சரி இன்னும் பின்னால் செல்வோமா- அடே அப்பா – இது என்ன யானைகளின் அழகிய அணிவகுப்பு.
1207
இன்னும் பின்னால் செல்வோம் – அப்பாடா இதன் உண்மையான அளவு அருகில் செல்லும் மனிதனின் உயரத்தை வைத்து கணக்கிட முடிகிறது. இப்போது புரிகிறதா இந்த கலை நுட்பத்தின் அபாரத்தை.
12001203
சரி, மற்ற இடங்களில் யானைகளுடன் சிங்கங்கள் மற்றும் யாழிகளும் உள்ளன. பொழுது போகவில்லை என்று யானையுடன் சிங்கம் சண்டை போடுகிறது போல.
1243
சரி, இவை அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ?? தொடரும்

பெரிய கோவில் – சிறிய சிற்பம்

நாம் மல்லை அர்ஜுன தவம் முன்னர் பார்த்தோம். அதே போல காஞ்சி கைலசனாத கோவில் சிற்பமும் பார்த்தோம்.அங்கே பல்லவ சிற்பியின் கலை பார்த்த நாம் – இப்போது அங்கிருந்து சுமார் முன்னூறு ஆண்டுகள் பின்னர் சோழ சிற்பி இதே கதையை கையாண்ட முறையை பார்போம்.

சோழ பேரரசன் ராஜ ராஜன் கட்டிய கற்றளி – தஞ்சை பெரிய கோவில் (எனினும் அவனே பெரிய கற்றளி என்று அழைத்த கோவில் காஞ்சி கைலசனாத கோவில். )

சரி, பெரிய கோவில் என்றதும் அங்கு இருக்கும் அனைத்தும் பெரியது என்று இல்லாமல் – நாம் அங்கே இருக்கும் சிறு சிற்பங்களை பார்போம். முன்பு நாம் பார்த்த சண்டேச அணுகிறஹ முர்த்தி போல, அடுத்து நாம் பார்ப்பது பசுபதஅஸ்த்ரதான முர்த்தி. சிறு சிற்பம் என்றாலும் மிக அழகான வடிவம். முதலில் முழு சிற்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
1173
நிறைய நபர்கள் – புரிய கொஞ்சம் கடினமாக இருக்கிறதா ?. சரி ஒவ்வொன்றாக பார்போம். முதலில் கீழ் இருந்து மேல்

முதல் வரிசை
1165
இங்கே சிவ பூத கணங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக ஒரு காட்டுப்பன்றி போல மாறுவது போல வடித்து உள்ளனர். சரி கதையை மீண்டும் பார்போம். ***

அர்ஜுனன் மகாபாரத போருக்கு தன்னை தயார் படுத்து ஈசனிடம் இருந்து பசுபத அஸ்திரத்தை பெற முயல்கிறான். கடுந்தவம் புரிகிறான். அப்போது ஈசன் அவனை விளையாட்டாய் பரிசோதிக்க வேடுவன் போல வேடம் இட்டு – ஒரு பன்றியாயை இருவரும் வேட்டை ஆடுவது போல நிகழ்வு, அப்புறம் இருவருக்கும் யுத்தம் – கடைசியில் அர்ஜுனன் வந்தது ஈசன் என்று உணர்த்து அவன் தாள் பணிய, அஸ்திரத்தை பெறுகிறான்.

இப்போது மீண்டும் சிற்பத்திற்கு வருவோம் – இரண்டாம் தளம் – இங்கே அர்ஜுனன் ஒரு காலில் நின்று தவம் புரிகிறான் ( கடுந்தவம் போல இல்லை – மல்லையில் எலும்பும் தோலுமாய் இருந்த துறவி போல இல்லாமல் சற்று நன்றாகத்தான் உள்ளான் )
11631169
806
அடுத்த காட்சி – இருவருக்கும் யுத்தம் – அருகில் உமை, தனது மடியில் குழந்தை முருகனை வைத்து இருக்கும் கோலம் அருமை
11761178
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் கோலம் ( நாம் முன்பு காஞ்சி கைலாசநாத கோவிலில் பார்த்த வடிவம் ) அருமை. 1192
1167
அருகில் நான்முகன், மஹாவிஷ்ணு மற்றும் லெட்சுமி . மல்லையில் விஷ்ணு மட்டும் கோவிலினுள் இருப்பது போல இருக்குமே ??
1196
அடுத்த மேலும் சில தெய்வங்கள் – இந்த அறிய காட்சியை கண்டு நிற்கின்றனர்.

அடுத்த தளம் – இங்கே அருமையாக அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் ஈசன் – அடுத்து உமை – அவர்களுக்கு முன் கை கூப்பி நிற்க்கும் அர்ஜுனன் – அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை அளிக்கும் குள்ள பூத கணம்…இதை காணும் விண்ணவர்கள் அவர்களை போற்றுகின்றனர்.
11711182
அடுத்து – அம்மையும் அப்பனும், மடியில் முருகனும் மீண்டும் கைலைக்கு செல்கின்றனர். அந்த குழந்தையின் மடி சவாரி – என்ன உயிரோட்டம்.
1180
கடை தளம் – இங்கேயும் விண்ணவர். ஒரு முனிவர் தன் சீடனுக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உள்ளது – வியாசர் விருந்தோ ? 11601307

***

இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி

ஒரு அருமையான நம் ஐயம் தீர்க்கும் பாடல் ( இதற்க்கு சரியான விளக்கம் தந்த திரு வி. சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.)

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.48.6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ(டு) எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுன னோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை:
பன்றியைத் துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் – பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக் காத்தனர் என்பது வரலாறு. கோடு – கொம்பு. மால் – பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு – பெருமை.

உத்திரமேரூரில் ஒரு கொடை வள்ளல்

சென்ற ஜூன் மாதம் சென்னை சென்றபோது நண்பர் சந்திரா அவர்கள் ரீச் (REACH Foundation – temple restoration group) உத்திரமேரூர் கைலாசநாத கோவில் பற்றி கூறி அங்கே செல்வோமா என்றார்.ஆஹா ஒரு வாரம் இந்தியா பயணத்தில் நமக்கு இப்படி ஒரு அதிஷ்டமா என்று ஆவலுடன் சென்றேன்.

அங்கு கண்ட காட்சி ஏன்டா சென்றோம் என்று என்னை இன்று வரை உலுக்கும் என்று அப்போது தெரியவில்லை.

பயணம் இனிதே, எட்டு மணிக்கு புறப்பட்டு பத்து மணிக்குள் சென்றோம், பெருமாள் கோவில் முதலில் சென்றோம். அங்கிருந்து கைலாசநாத கோவில் சென்றோம். பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது, படங்களை மெதுவாக பாருங்கள்… புரியும்.
958961964967970988991994997

10031006100910121015101810211024102710301039
முதலில் பார்த்தபோது எப்போது வேணும் என்றாலும் விழும் என்று இருந்தது கோபுரம் ( brick super structure on a solid granite base ),எனினும் அடித்தளம் கருங்கல், ஆனால் எங்கும் ஒரே குப்பை – துடைத்தோம். எதோ கிறுக்கல் போல தென்பட்டது,கூட வந்த கல்வெட்டு அராய்ச்சியாளர்
உதவியுடன் படித்தோம்…. மேலே முதல் வரி
973976979982985988
ஸ்வஸ்திர்ஸ்ரீ திரு மன்னி வளர இரு நில மடந்தையும் ……ஐயோ முதலாம் ராஜேந்திர சோழன் (1012 AD to 1044 AD) இன்னுமும் கிழே உள்ள இடத்தை சுத்தம் செய்து – படித்தார் ….. தந்தி வர்ம பல்லவன். (around 830 AD)
1073107610701049
973976979982985988
ஆயிரத்தி முன்னுறு அண்டு பழமை -சென்னை அருகில் ( approx 60 kms) -இப்படி ஒரு அவல நிலை. மொழி / மறை – தமிழ் – புழுதியில்.

பலே தமிழா, இந்த பெருமை உன்னை மட்டுமே சாரும்.

ஆனால் இப்போது இந்த கோவிலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. REACH FOUNDATION என்ற அமைப்பு இந்த பணியில் முழு மூச்சாக இறங்கி ஆலயத்தை செவ்வனே புதுபித்து வருகிறது. இதற்கு நன்கொடைகள் பல தேவை . முடிந்தால் உதவுங்கள். இதோ நமக்கு ஒரு முன்னோடி. சாதாரண மனிதர், தனது நிலத்தை விற்று பணத்தை கொடை செய்த வள்ளல்.இவர் போல இன்னும் பல நல்ல நெஞ்சங்கள் முன்வர வேண்டும்.
955
http://www.conserveheritage.org/

ஒரு கல்லின் மறுபக்கம்

மல்லை சாளுவன் குப்பம் ஒரு கலைபெட்டகம். நாம் முன்பு புலி குகை பார்த்தோம். அப்போது அங்கு இன்னும் இரெண்டு பொக்கிஷங்கள் உண்டு என்று கூறினேன்.

அவை, சிறு சிற்பம் என்றாலும் மிக அழகிய மகிஷாசுரமர்தினி மற்றும் அதன் அருகில் இருக்கும் குடவரை கோவில் (அதிரணசண்ட மண்டபம் -அதில் உள்ள ராஜ சிம்ஹன் கல்வெட்டு. அதை பிறகு பார்போம்.)

அந்த குடவரைக்கு முன் ஒரு சிறு கல் இருப்பதை பலரும் பார்ப்பதில்லை.

1156
அங்கு சென்று கல்லின் பின்புறம் பார்த்தல் ஒரு சிறு அற்புத மகிஷாசுரமர்தினி சிலைகோர்ப்பு இருப்பதை காணலாம்.
11241128
இதன் விநோதம் என்னவென்றால் – மல்லையில் இருக்கும் புகழ் பெற்ற இதே கதையின் ( மகிஷாசுரமர்தினி ) அடுத்த நிகழ்ச்சியை குறிக்குமாறு செதுக்கி உள்ளனர்.
1146
உற்று பாருங்கள் – மல்லை சிலையில் – மகிஷன் கையில் கதையுடன் சிங்கவாகனத்தின் மேல் இருக்கும் அன்னையை எதிர்கொள்ளும் கோலம்.
11421144
இங்கோ துவம்ச யுத்தத்தின் பின் சோர்வடைந்து கிழே விழுந்து இருக்கும் மகிஷன் ( சிறு வடிவமாக இருப்பினும் சோர்வில் அசுரனின் நாசி விரிந்து பெருமூசிடுமாறு உள்ளது ) – யுத்தத்தில் வெற்றி கொண்ட தேவி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வரும் கோலம்
மல்லை துர்கைக்கு எட்டு கைகள் – சாளுவன் குப்பம் துர்கைக்கு ஆறு கரங்கள்தான் உள்ளன.
113011321134
11371139
– அபாரம்.

விட்ட குறை – தொட்ட குறை

ஸ்ரீரங்கம் அழகிய தூண்கள் பற்றிய மடல்களை அனைவரும் கண்டு ரசித்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து ஒரு விந்தை நடந்தது. புதிய நண்பர்கள் இருவர் – ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாதவர், உலகில் இரு கோடியில் இருப்பவர். இருவரும் இதே தூண் சிற்பத்தை வரைந்துள்ளனர். இது தான் கலையின் வெற்றி, எங்கோ உறங்கிக்கொண்டு இருக்கும் நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பி, விட்ட கொறை தொட்ட கொறை என்று சொல்வது போல, நம்மையும் ஒரு கலை ரசிகனாக மட்டும் அல்லாமல் கலைஞனாகவே மாற்றும்.

ஒரு கலைஞனுக்கு தன் படைப்பில் உள்ள அழகை தான் மட்டும் இல்லாமல் பலரும் ரசிக்க காண்பதே ஊதியம் ….இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த சிற்பிக்கு இவ்விருவர் மட்டும் அல்லாமல் நாம் அனைவரும் தரும் கூலி – அவனின் உன்னத கலையை ரசித்து நெகிழ்வது.

திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஓவியம்
http://raga-artblog.blogspot.com/2008/09/srirangam.html
1097
1111
1106
திரு ஸ்ரீராம் ராஜாராம் அவர்களின் ஓவியம்
http://album-photo.geo.fr/ap/album/6945/?pos=1&order=InsertDate
1101
1109

இது மானுட வேலைபாடா

கலை அழகு தெய்வீகம். இதை மல்லையில் எங்கும் காணலாம். ஆனால் மிகவும் அருமை பஞ்ச ரத குழுமத்தில் இருக்கும் அர்ஜுன ரதம். இங்கு இருக்கும் இரு வடிவங்கள் மானுட வேலை பாடே அல்ல.
1085
ஒன்று யானை மேல் அமர்ந்து இருக்கும் இந்திரன் அல்லது ஆறுமுகன். யானை முன் வடிவம் மற்றும் அதன் மேல் அமர்ந்து இருக்கும் காட்சி -பக்க வாட்டில் செதுக்குவதே கடினம் – 3D முறையில் செதுக்குவது மிக கடினம்,அமானுஷ உயிரோட்டம்.
10811093
அதை அடுத்து நிற்கும் இரு பெண் உருவங்களோ,ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் காற்று மழை, மண் , கடல், மனிதன் என்று எல்லா சிதைவுகளையும் தாண்டி, இந்த பெண்ணின் நளினம், இடை சற்றே வளைந்து, கால்களை வேறு பக்கம் வளைத்து, ஒருபுறமாக திரும்பி நிற்கும் வடிவம், கரம் வளைந்து தன் கூந்தலை கோதி விடும் கோணம் – சற்றே வேட்கிய தலை – இது எல்லாம் போதாதென்று அந்த மோகனப் புன்னகை. இது பல்லவ சிற்பியின் கற்பனை திரனா அல்லது பல்லவ சபையில் இரம்பையும் மேனகையும் இருந்து உருவங்களுக்கு ஒப்பனை செய்தார்களா.
1090
1087
கடைசி படம் varlaaru.com இருந்து எடுத்து. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக இங்கே சென்று சிற்பகலை பற்றி மேலும் படியுங்கள்.